வண்ண நூல்களால் குகேஷின் உருவத்தை வரைந்த பெண்
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் முகேஷ். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14வது சுற்றில் 58வது காய் நகர்தலில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த போட்டி டிராவில் முடியும் என்று நினைக்கும் நிலையில் குகேஷ் 7.5 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார். இந்த நிலையில் பெண் ரசிகை ஒருவர் குகேஷின் உருவத்தை வண்ண நூல்களால் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த போட்டோ வைரலாகிறது.
No comments