தென்காசியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் கலந்துரையாடல் - MAKKAL NERAM

Breaking

Monday, December 23, 2024

தென்காசியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் கலந்துரையாடல்


தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மேல்நிலைப்பள்ளி அனு பிரபா (12), பாரதி (10) தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முத்து ஸ்ரீதர் (11) ,ஜோ ஜோஸ்வின்(10) மஞ்சம்மாள் மேல்நிலைப்பள்ளி சிவ முத்து லட்சுமி (12), அபிநயா (10), புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி தனஸ்ரீ(12), பிரின்ஸ் ராஜதுரை (12) மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மணிகண்ட பிரபு (12) பிரியதர்ஷினி (10), சுந்தரபாண்டியபுரம் இலக்கியா (12), மதுமித்ரா (12), செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேனு கிருஷ்ணா (11), முகமத் ரஷீக் (9), வேதம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆதிரா ஸ்ரீமுகி (10),ஜைனாப்(10), இடைகால் அரசு உயர்நிலைப்பள்ளி காவியா (9), சத்தியமுத்து (10) கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிரியங்கா (12), கோமதி (12) ஆகிய அரசு பள்ளி மாணவ மாணவியர் 20 பேர் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் கலந்துரையாடினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன். முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா மற்றும் அரசுஅலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment