பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுதலை - MAKKAL NERAM

Breaking

Saturday, December 21, 2024

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுதலை

 


கோயம்புத்தூரில் குண்டுவெடிப்பு குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை மற்றும் திமுக அரசு அனுமதி கொடுத்துள்ளதாக கண்டனம் தெரிவித்து நேற்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் பின்னர் கருப்பு தின பேரணி நடைபெற்றது.

இதன் காரணமாக தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு அவர்கள் அனைவரையும் விடுவித்தனர். மேலும் அவர்கள் இருவரையும் ஒரு தனியார் மண்டபத்தில் கைது செய்து வைத்திருந்த நிலையில் பின்னர் அனைவரையும் காவல்துறையினர் விடுவித்துவிட்டனர்.

No comments:

Post a Comment