திருமணம் செய்து வைக்காத தந்தையை கொன்று தீயணைப்பு வீரர் தற்கொலை - MAKKAL NERAM

Breaking

Saturday, December 21, 2024

திருமணம் செய்து வைக்காத தந்தையை கொன்று தீயணைப்பு வீரர் தற்கொலை

 


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலபுனவாசல் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு விக்னேஷ், ராஜேஷ் குமார், மூர்த்தி ஆகிய மகன்கள் இருந்துள்ளனர். இதில் விக்னேஷ் திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக விக்னேஷ் தனது தந்தையிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சேகர் பதில் அளிக்கவில்லை. இதனால் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்தில் விக்னேஷ் அரிவாளால் தனது தந்தையை வெட்டியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தையை வெட்டியதால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து படுகாயங்களுடன் கிடந்த விக்னேஷை மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விக்னேஷும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment