கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துவ ஆலய ஐக்கியத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா - MAKKAL NERAM

Breaking

Thursday, December 26, 2024

கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துவ ஆலய ஐக்கியத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா


கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ஷைன் குளோபல் அறக்கட்டளை மற்றும்  ஃபுல் காஸ்பள் மினிஸ்ட்ரிஸ் கிறிஸ்துவ ஆலய ஐக்கியத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கும்மிடிப்பூண்டியில் உள்ள ஷைன் குளோபல் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஏ.ஆரோன் தலைமையில் பல்வேறு  கிறி்ஸ்துவ ஆலயங்கள் இணைந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. 

ஷைன் குளோபல்  அறக்கட்டளை மற்றும் ஃபுல் காஸ்பள் மினிஸ்ட்ரிஸ் இணைந்து கும்மிடிப்பூண்டியில் நடத்திய இந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவ பாதிரியார்கள் கலந்து கண்டனர். 

இந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு இயேசுவே ஆதாரம் ஊழியங்கள் நிறுவனர் ஜெ. டானியல், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் இயக்குனர் காட்சன், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் ஜெ. யாபேஸ், இயேசு உன்னை காண்கிறார் ஊழியங்கள் நிறுவனர் பால் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி  ஏழை எளியோர்களுக்கு இனிப்புகள் பரிமாறி இயேசுவின் பிறப்பை கொண்டாடினர்.

No comments:

Post a Comment