தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.... வானிலை ஆய்வு மையம் தகவல் - MAKKAL NERAM

Breaking

Friday, January 10, 2025

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.... வானிலை ஆய்வு மையம் தகவல்


தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள  நிலையில் ஜனவரி 12ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு 7:00 மணி வரையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment