உத்தரபிரதேசம்: மகா கும்பமேளாவில் பயங்கர கூட்ட நெரிசல்..... பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 29, 2025

உத்தரபிரதேசம்: மகா கும்பமேளாவில் பயங்கர கூட்ட நெரிசல்..... பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

 


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் மொத்தம் 46 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அதாவது 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து நீராடுவார்கள். இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் நீராடியுள்ள நிலையில் இன்று தை அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள் ஏராளம்.இந்த நாளில் புனித நீராடினால் மிகவும் யோகம் என்று கூறப்படுவதால் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருவதால் தற்காலிகமாக புனித நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment