• Breaking News

    மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்..... மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் சாலை மறியல்


    திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரம்பதூர் ஊராட்சி வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரது மனைவி யோகேஸ்வரி.

    லோகேஸ்வரி தனது வீட்டில் வளர்த்த எலுமிச்சம் செடியில் வளர்ந்திருந்த எலுமிச்சை காயை பறிப்பதற்காக வீட்டின் மாடிக்கு சென்று எழுமிச்சை பறிக்க முயன்ற போது வீட்டின் மாடி அருகே சென்ற 110 கேவி திறன் கொண்ட மின்சாரம் தாக்கியதில் லோகேஸ்வரி தூக்கி வீசப்பட்டார்.

    மின்சாரம் தாக்கியதில் லோகேஸ்வரி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்து லோகேஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது வரும் வழியிலேயே லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் ஊராட்சி நிர்வாகத்திடமும் மின்சாரத் துறை அதிகாரிகளிடமும் பலமுறை  குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் 110 திறன் கொண்ட மின்கம்பிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து இதுவரை அகற்றப்படாத காரணத்தினால் இந்த விபத்து நேரிட்டதாகவும் இதனால் உயிரிழப்புக்கு மின் துறை அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து லோகேஸ்வரன் உயர் உறவினர்கள் சால மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் உயர்மின் கம்பியை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்சார வாரியம் கண்டுகொள்ளாததால் இளம்பெண் உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது எனவும் லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் உயர் மின் அழுத்த கம்பியை அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தின் போது மூதாட்டி ஒருவர் திடீரென மயக்கமடைந்து சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    No comments