அடிக்கடி போனில் பேச்சு..... காதல் மனைவியை கரண்டியால் அடித்து கொன்ற கணவன் - MAKKAL NERAM

Breaking

Monday, January 6, 2025

அடிக்கடி போனில் பேச்சு..... காதல் மனைவியை கரண்டியால் அடித்து கொன்ற கணவன்

 


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மேற்கு காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவரை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ராஜாத்தி அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனால் பார்த்திபனுக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது.

நேற்று அதிகாலை கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கரண்டியால் ராஜாத்தியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராஜாத்திy மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ராஜாத்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment