திருச்செங்கோடு: தவெக சார்பில் வேலுநாச்சியார் பிறந்த தின கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Monday, January 6, 2025

திருச்செங்கோடு: தவெக சார்பில் வேலுநாச்சியார் பிறந்த தின கொண்டாட்டம்


வீரமங்கை வேலுநாச்சியாரின் 295 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர்  அணி சார்பாக வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினத்தை திருச்செங்கோட்டில் கொண்டாடினர். திருச்செங்கோடு ரமேஷ் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகிகள் வேலுநாச்சியாரின் பிறந்தநாளை கொண்டாடினர்.இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி முனீரா பானு, மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்கமாக  மெஹருனிசா உறுதி மொழியை வாசிக்க மற்றவர்கள் வழிமொழிந்தனர்.

வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழகத்தினர் வளர்ப்புவி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை  அடுத்து வேலு நாச்சியார் வாழ்க என்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர்விஜய் வாழ்க என்றும் முழக்கமிட்டனர் .இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு வேஷ்டி சேலை வழங்கப்பட்டது நாமக்கல் கிழக்கு மாவட்ட பகுதிகளை சேர்ந்த ராசிபுரம்,சேந்தமங்கலம் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நகர பேரூர் ஒன்றிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு வேலுநாச்சியார் பிறந்த நாளை கொண்டாடினார்.

No comments:

Post a Comment