அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்..... திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்கள் வாகனங்களுக்கு யார் அந்த சார் ஸ்டிக்கர் ஒட்டும் பணி - MAKKAL NERAM

Breaking

Friday, January 10, 2025

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்..... திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்கள் வாகனங்களுக்கு யார் அந்த சார் ஸ்டிக்கர் ஒட்டும் பணி


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவள்ளூர் வடக்கு  மாவட்டம் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் செயலாளர் டி.சி மகேந்திரன் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் பொதுமக்களின் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் யார் அந்த சார் ? என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஓட்டும் பணி தொடங்கப்பட்டது.


 இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார்  உள்ளிட்ட நிர்வாகிகள் பைக்கில் ஸ்டிக்கர் ஒட்டி பேரணியாக செல்ல முயற்சி எடுத்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நிறுத்தினர் தொடர்ந்து காவல்துறையுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தை ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு அபிராமன் நகர செயலாளர் எஸ் டி டீ ரவி மு, க ,சேகர் எம் எஸ் எஸ் சரவணன் ஓடை ராஜேந்திரன் பல்லவாடா ரமேஷ் டேவிட் சுதாகர் பாசறை ,சரவணன், மனோகர், முல்லைவேந்தன், மஜீத் பாய் மனோகர் சுகுமாரன், சந்தோஷ் ,கோபி, இனியம் மனோஜ், எம் எஸ் எஸ் ,வேலு. ராஜேஷ் ,ரமேஷ்., சுசிலா, விஜயா ,மகளிர் அணி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment