நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 22, 2025

நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

 



இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். 

இதனை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டஅறிக்கையில் கூறியுள்ளதாவது:நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 5ம் தேதி சிந்து சமவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கம், சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ' சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையை வெளிக் கொணரும் தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கு ரூ.10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்' எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment