அதிமுக நிர்வாகி எரித்து கொலை..... கடலூரில் பரபரப்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, January 16, 2025

அதிமுக நிர்வாகி எரித்து கொலை..... கடலூரில் பரபரப்பு


 கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் அருகே அதிமுக நிர்வாகி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமன் என்பவர் அந்த பகுதி கிளை பொருளாளராக இருந்தார். இந்த நிலையில் எம்.விரட்டி குப்பம் கிராமத்தில் இருக்கும் முந்திரி தோப்பில் எரிந்த நிலையில் கதிர்காமன் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அதிமுக நிர்வாகியை எரித்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment