மதுரை: கைது செய்யப்பட்ட பாஜகவினர் ஆட்டு மந்தையில் அடைப்பு - MAKKAL NERAM

Breaking

Friday, January 3, 2025

மதுரை: கைது செய்யப்பட்ட பாஜகவினர் ஆட்டு மந்தையில் அடைப்பு

 


அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று மதுரையில் நடந்தது. இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைப்பதாக கூறி போலீசார் அழைத்துச் சென்றனர்.

கடைசியில், மதுரை ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் கொண்டு சென்று அடைத்தனர். அங்கு ஏற்கனவே நிறைய ஆடுகள் இருந்தன. அந்த மண்டப வளாகத்தில் குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ., கட்சியினர் அடைக்கப்பட்டனர். கட்சியினர் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் அங்கு 100க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.தங்களை வேண்டுமென்றே இந்த மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய பா.ஜ., கட்சியினர், வேறு மண்டபத்துக்கு மாற்ற வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

No comments:

Post a Comment