தெலுங்கு சினிமாவிற்கு திரும்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - MAKKAL NERAM

Breaking

Sunday, January 26, 2025

தெலுங்கு சினிமாவிற்கு திரும்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 'அட்டகத்தி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து, 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். அதன்படி, ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்த சங்கராந்திக்கு வஸ்துன்னம் படம் கடந்த 14-ம் தேதி திரைக்கு வந்து ரூ. 200 கோடி வசூல் செய்திருக்கிறது.இதன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் வெற்றி பட நடிகை என்ற பட்டியலில் சேர்ந்து இருக்கிறார். இதனால், புதிய தெலுங்கு படங்களில் அவரை நடிக்க வைக்க அங்குள்ள இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment