மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் ஒரு கூட்டம் தமிழகமெங்கும் திமுக சார்பில் நடைபெற்றது. இந்நிலையில்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி என்ற ராஜேஷ்,துணை அமைப்பாளர்கள் தமிழரசன் விக்னேஷ் உதயன் தமிழழகன் சேதுராமன் தனலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில்,மாநில தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசகர் மனுஷ்ய புத்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன், தலைமை கழக பேச்சாளர் கவிஞர் தமிழ்கொண்டான் ஆகியோர் கலந்து கொண்டு திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான காரணம் என்ன? என்பதை எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றி பேசினர்.
இக்கூட்டத்தில்,சி.எச்.சேகர்,கே.ஜி.பாஸ்கர்சுந்தரம்,ஏ.கே.சுரேஷ்,செந்தமிழ் சசி,மு.பகலவன்.ஜெ.மூர்த்தி, கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, மு.கதிரவன்,எஸ்.ரமேஷ், பி.வெங்கடாஜலபதி,பா.செ.குணசேகர்,ஏ.வி.ராமமூர்த்தி,மு.மணிபாலன்,கி.வே.ஆனந்தகுமார்,ந.பரிமளம்,ஆ.சத்தியவேலு, ஜான்பொன்னுசாமி,அபிராமிகுமரவேல்,எம்.கேசவன்,ஆரணி பி.முத்து மற்றும் மாவட்ட,ஒன்றிய, பேரூர்,கிளைக்கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில், இரா.அறிவழகன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட மாணவரணி சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment