காம வெறியன் சீமானே..... திராவிட பெரியார் கழகம் ஒட்டிய பரபரப்பு போஸ்டர் - MAKKAL NERAM

Breaking

Saturday, January 11, 2025

காம வெறியன் சீமானே..... திராவிட பெரியார் கழகம் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்

 



நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் அவருக்கு எதிராக பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக திராவிட பெரியார் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சீமானை காம வெறியன் என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருப்பது, சினிமா நடிகையை சீரழித்து ஏழு முறை கருக்கலைப்பு செய்த காம வெறியன் தரம் தாழ்ந்த அரசியல் செய்யாதே. தமிழ்நாடு உன்னை மன்னிக்காது என்று இருக்கிறது.

இந்த போஸ்டர் நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னதாக பெரியாருக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சீமான் காம இச்சை வரும் போதெல்லாம் தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னதாக கூறினார். இதற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும் என்று அவருக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அந்த ஆதாரத்தை அவர்களே வைத்துக்கொண்டு என்னிடம் வந்து கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கூறினார். இதனால் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் ‌ பெரியார் அமைப்பு சார்பாக பல இடங்களில் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment