கோவை: ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலி - MAKKAL NERAM

Breaking

Thursday, January 16, 2025

கோவை: ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலி

 


கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் கூட்டமாகவும் மற்றும் ஒற்றை யானையாகவும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனை தடுப்பதற்காக வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெரியநாயக்கன் பாளையம் பழைய புதூர் பகுதியில் உள்ள மேட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி வேலுமணி (74) என்பவர் தோட்டத்திற்கு முன் புறம் உள்ள கேட்டை பூட்டுவதற்காக சென்றுள்ளார். பூட்டினை பூட்டிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒற்றை யானை அவரை தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் பெரியநாயக்கன் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

பின்னர் அவர்கள் வேலுமணியின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment