கோவை: 100 சதவீதம் சொத்து வரி உயர்வு..... திமுக மேயரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் - MAKKAL NERAM

Breaking

Friday, February 7, 2025

கோவை: 100 சதவீதம் சொத்து வரி உயர்வு..... திமுக மேயரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

 


கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயர்வு, ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்துவரி உயர்த்துவது, சொத்து வரி செலுத்த தாமதம் செய்தால் ஒரு சதவீதம் அபராதம் விதிப்பதற்கு அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், ட்ரோன் சர்வே எடுப்பதை நிறுத்தக் கோரியும், தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கொ.ம.தே.க., உள்ளிட்ட ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 17 பேர் இன்று மாமன்ற கூட்டத்தில் மேயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதன் பின், மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, விக்டோரியா ஹால் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், காந்தி சிலைக்கு சென்று. உறுதிமொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment