திருவள்ளூர்: பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு..... சங்கத் தலைவர் ,செயலாளர் உட்பட 10 பேர் பதவியேற்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, February 11, 2025

திருவள்ளூர்: பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு..... சங்கத் தலைவர் ,செயலாளர் உட்பட 10 பேர் பதவியேற்பு


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இயங்கி வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 

தேர்தல் பொறுப்பாளர் மூத்த வழக்கறிஞர் ஐசக் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக வழக்கறிஞர் வி. பார்த்தசாரதி,சங்க செயலாளராக வழக்கறிஞர் பெரவள்ளூர் வ.செ.ராஜா,பொருளாளராக வழக்கறிஞர் சே.ஜெயகாந்தன் மற்றும் வழக்கறிஞர்கள் துணைத் தலைவர்களாக எம்.தேவராஜ்,ஏலியம்பேடு ப.மதன்,இணை செயலாளர்களாக ஆர். சிலம்பரசன்,கோ.ஜவஹர்,விளையாட்டுத்துறை செயலாளர்களாக எம்.சங்கர்,கே.கவியரசன், நூலகராக ராம்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத்தில் பதவி பிரமாணம் நடைபெற்றது. பின்னர் அனைவரும் குதிரை வண்டியின் மீதும் ஊர்வலமாகவும் பொன்னேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்பு பதவியேற்ற அனைவருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.



No comments:

Post a Comment