பொழிச்சலூர் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதலாம் ஆண்டு வெற்றி விழாவை முன்னிட்டு 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கழகத்தின் தலைவரின் சொல்லுக்கிணங்க மற்றும் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டில் படி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் வி.குமார் அறிவுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழாவை முன்னிட்டு பொழிச்சலூர் பகுதி சார்பில் ஆவின் பால் நிலையம் அருகில் பல்லாவரம் தொகுதி தலைவர் டி சுறா ரவி அவர்கள் முன்னிலையில் பொழிச்சலூர் ஊராட்சி தலைமை ஜே.மணி ஜெயமோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ். ஜான் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 300க்கு மேற்பட்டோர் ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன், பகுதி பொருளாளர் சந்துரு, வி.வினோத், எஸ்.பிரதீப், கார்த்திக், அருண்குமார், மகளிர் அணி ரெபேக்கா, இந்துமதி, வளர்மதி, பிரியா, ரதி, ஜெயந்தி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு, பகுதி நிர்வாகிகள் தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment