பொன்னேரி: மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் அவருடைய மனைவி எஸ்.எழிலினி இயற்கை எய்தினார்..... திமுக அமைச்சர்கள் காந்தி, சா.மு.நாசர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் அஞ்சலி - MAKKAL NERAM

Breaking

Saturday, February 8, 2025

பொன்னேரி: மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் அவருடைய மனைவி எஸ்.எழிலினி இயற்கை எய்தினார்..... திமுக அமைச்சர்கள் காந்தி, சா.மு.நாசர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் அஞ்சலி


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மறைந்த முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் அவருடைய மனைவி எழிலினி வயது (67) வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார். அவருக்கு திமுக அமைச்சர்கள் காந்தி சா.மு நாசர்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர்,பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வழக்கறிஞர் அன்பு வாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது மகன்கள் செந்தில்ராஜ்குமார் ,தமிழ் உதயன், தமிழ் பிரியன் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். 


 இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர்கள் கி.வே.ஆனந்தகுமார், கா.சு ஜெகதீசன்,வல்லூர் ரமேஷ் ராஜ், எல்லாபுரம் மூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன், முன்னாள் சோழவரம் துணை பெரும் தலைவர் கருணாகரன்,மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் ,மீஞ்சூர் முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ்,பொன்னேரி தீபன்,அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம்.பி. பலராமன்,மீஞ்சூர் பேரூர் செயலாளர் பட்டாபிராமன் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மீஞ்சூர் தமிழரசன் அமிர்தலிங்கம் ,திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட ,ஒன்றிய ,நகர, கிளைக் கழக நிர்வாகிகள் ,விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.




No comments:

Post a Comment