வருகைப் பதிவு குறைவாக இருக்கும் கல்லூரி மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பதா...? ஐகோர்ட் கேள்வி - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 19, 2025

வருகைப் பதிவு குறைவாக இருக்கும் கல்லூரி மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பதா...? ஐகோர்ட் கேள்வி

 


வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, மாணவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (பிப்.,19) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும்.

* வருகைப் பதிவு குறைவாக இருக்கும் கல்லூரி மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல.

* உரிய கட்டணத்தை செலுத்தி மீண்டும் படிப்பை தொடர மாணவர் விரும்பினால் அனுமதி அளிக்க பல்கலைக் கழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

* மாணவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கைத் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment