மதம் மாறும் வேங்கைவயல் மக்கள்? திருமாவளவன் காட்டம்
வேங்கை வயல் விவகாரத்தில் சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்த நிலையில், இது தொடர்பான போலீஸ் விசாரணையை , குற்றப்பத்திரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் விசிக கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், கடைசி மூச்சு வரை சனாதனத்தை எதிர்த்த நபர் என்றால் அது புரட்சியாளர் அம்பேத்கார்தான். பெரியாரை விட ஒருபடி மேலே போனார் புரட்சியாளர் அம்பேத்கார்தான்.
நீ இந்த மதத்தில் இருப்பதால்தானே இப்படி செய்கிறாய் என்று மதம் மாறுகிறேன் என்று கூறினார்.வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை அங்கே உள்ள மக்களும் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது. சிலரிடம் நான் அவசரப்பட வேண்டாம் என்று கூறினேன். ஆனால் வேங்கை வயலில் நீதி கிடைக்க வேண்டும்.. அப்படி இல்லையென்றால் அவர்களுக்கும் மதம் மாறுவதை தவிர வேறு வழியே இல்லை, என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.
No comments