நான்காவது படிக்கும் நடந்த விஷயத்தை பகிர்ந்த சீரியல் நடிகை - MAKKAL NERAM

Breaking

Friday, February 21, 2025

நான்காவது படிக்கும் நடந்த விஷயத்தை பகிர்ந்த சீரியல் நடிகை


 சன் டிவியில்  கல்யாணப்பரிசு என்ற சீரியல் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நேஹா கவுடா. விஜய் தொலைக்காட்சியிலும் பாவம் கணேசன் சீரியலிலும் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கன்னட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.  2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.  

இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் யூடியூப் சேனலில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து கூறியுள்ளார். அதாவது, “இன்றும் கூட காம கொடுரர்களால் எத்தனையோ சிறுமிகளுக்கு மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. பல நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை.இன்னும் சில குழந்தைகள் பயந்து வீட்டில் சொல்ல மாட்டார்கள். தெரிந்தாலும் அதை பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரகசியமாக வைக்கிறார்கள். பெற்றோர்களே அந்த விஷயத்தை அங்கே மூட பார்க்கிறார்கள். இதனால் தான் இது போன்ற கொடூரர்கள் எந்த பயமும் இல்லாமல் பல குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள். நான் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நாள் என் வீட்டில் அம்மா இல்லை. என்னை தூங்க வைத்து விட்டு வெளியில் போயிருந்தார்.பாட்டி தான் இருந்தாங்க  .கண்விழித்து பார்த்தபோது அம்மா இல்லை அவங்களை தேடி வெளியே போயிட்டேன்.

பக்கத்து தெருவில் ஒருத்தன் உங்க அப்பா எனக்கு தெரியும் என்றும், நான் உனக்கு வாட்ச் வாங்கி கொடுக்கிறேன் என்றான். அவனுக்கு என்னுடைய அப்பாவை தெரியும் என்று நினைத்துக் கொண்டு அவன் பின்னாடியே சென்றேன். பின்பு ஒரு வாட்ச் கடைக்கு சென்று அங்கு கதவை சாத்தினான். ரொம்ப மோசமாக நடக்க ஆரம்பித்தான். அந்த நேரத்தில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பயங்கரமா அழ ஆரம்பித்தேன். எப்படியோ அவனிடம் இருந்து தப்பித்து வெளியே வந்தேன். அந்தக் கசப்பான நாளை நினைத்தால் எனக்கு இன்னும் பயமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment