விரைவில் தவெக பொதுக்கூட்டம்.... விஜயின் அதிரடி உத்தரவு - MAKKAL NERAM

Breaking

Thursday, February 13, 2025

விரைவில் தவெக பொதுக்கூட்டம்.... விஜயின் அதிரடி உத்தரவு

 


நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது.

இதற்கான பணிகளில் விஜய் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த பொதுச்செயலாளர் ஆனந்த், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆகியோருக்கு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் ஆண்டு விழா மற்றும் பொது குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஓஎம்சிஏ மைதானத்தில் விழாவை  நடத்த திட்டமிட்ட நிலையில், அதன் நிர்வாகம் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment