வேங்கை வயல் வழக்கு.... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு - MAKKAL NERAM

Breaking

Monday, February 3, 2025

வேங்கை வயல் வழக்கு.... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

 


தமிழகத்தை உலுக்கிய வேங்கை வயல் வழக்கு தற்போது வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வேங்கை வயலில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இரண்டு வருடங்கள் தாண்டியும் அதில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலையில் சமீபத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து குற்றப் பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட முரளி ராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் புதுக்கோட்டை நீதிமன்றம் தற்போது வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களையே குற்றவாளிகளாக காவல்துறையினர் சித்தரித்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த விவகாரத்தில் ஆடியோ கூட வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிலையில்  தற்போது வழக்கு வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment