வேளாங்கண்ணி: தொழுநோய் ஒழிப்பு திட்ட களப்பணியை மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 19, 2025

வேளாங்கண்ணி: தொழுநோய் ஒழிப்பு திட்ட களப்பணியை மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு


நாகை மாவட்ட ஆட்சியர்  உத்தரவின் பேரில் கீழையூர் வட்டாரத்தில் 44 குழுக்கள் ஆகவும், மற்றும் நாகப்பட்டினம் வட்டாரத்தில் 43 குழுக்கள் ஆகவும்,மொத்தம் 87 குழுவாக ஒரு குழுவிற்கு ஆண் பெண் இரண்டு  களப்பணியாளர்கள் வீதம்  அனைத்து வீடுகளுக்கும்  வீடு வீடாக சென்று பார்வையிட்டு யாருக்கேனும் தொழுநோயின் அறிகுறிகள் உள்ளனவா என கண்டறியும் பணி மாவட்ட தொழுநோய் அலுவலக  துணை இயக்குனர் மரு.சங்கரி  கண்காணிப்பில் 13.02.2025 முதல் துவங்கப்பட்டு  வருகின்ற 28.02.2025, வரை நடைபெறுகிறது.


அதன் ஒரு பகுதியாக கீழையூர் வட்டாரத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில்  நடைபெறும் களப்பணியை நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார்  நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களிடம்  கேட்டறிந்தார்.ஆய்வின்போது  வேளாங்கண்ணி சுகாதார ஆய்வாளர் சு.மோகன் மேற்பார்வையில் களப்பணியாளர்கள் வீடுகள் தோறும் பார்வையிட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment