நாகை அருகே ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெப்ப உற்சவ விழா..... வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமான்..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 12, 2025

நாகை அருகே ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெப்ப உற்சவ விழா..... வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமான்.....


நாகப்பட்டினம் மாவட்டம்  எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்து வந்தனர். 


இந்த நிலையில்   சிறப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீ முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் படிசட்டத்தில் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். 


தொடர்ந்து நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க தெப்பம் மூன்று முறை வலம் வந்ததது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



No comments:

Post a Comment