முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - MAKKAL NERAM

Breaking

Monday, February 10, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

 


சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2025- 26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்காக, சட்டசபை இம்மாத இறுதியில் கூடவுள்ளது.பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய சிறப்பு திட்டங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய சட்ட மசோதாக்கள் குறித்து, அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment