ஓசூர் அருகே பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.... சம்பவ இடத்திலேயே இருவர் பலி - MAKKAL NERAM

Breaking

Friday, February 7, 2025

ஓசூர் அருகே பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.... சம்பவ இடத்திலேயே இருவர் பலி

 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே ராயக்கோட்டை சாலையில் கரடி குட்டை என்ற பகுதியில் டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது.

இந்த டேங்கர் லாரியில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு 28 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு சென்ற நிலையில், எதிர்பாராதமாக லாரி சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் ராஜேஷ் குமார் (32), அவருடன் பயணம் செய்த அருள் (27) ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

டேங்கர் லாரி கவிழ்ந்ததில் பால் முழுவதும் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது.இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment