இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.4.50 லட்சம் அபராதம்.... நீதிமன்றம் உத்தரவு - MAKKAL NERAM

Breaking

Friday, March 21, 2025

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.4.50 லட்சம் அபராதம்.... நீதிமன்றம் உத்தரவு

 


கடந்த 6-ம் தேதி அன்று பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இன்று இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, 14 பேருக்கும் இலங்கை பணத்தில் தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தை கட்டினால் விடுதலை செய்யப்படுவார்கள். இதை கட்ட தவறினால் ஓராண்டுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment