சென்னை: லாரி மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..... 3 பேர் படுகாயம் - MAKKAL NERAM

Breaking

Thursday, March 6, 2025

சென்னை: லாரி மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..... 3 பேர் படுகாயம்

 


சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் நடந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரி மாணவர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்தக் கோர விபத்தில் தானேஷ் ரெட்டி மற்றும் ஸ்ரேயஸ் ஆகிய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன் பிறகு காரில் இருந்த முகமது ஜெய்டு, உமா மற்றும் ஹரிணி ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment