ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் கரம் பிடித்த காதலன்..... வயிற்றெரிச்சலில் 90’ஸ் கிட்ஸ்..... - MAKKAL NERAM

Breaking

Friday, March 28, 2025

ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் கரம் பிடித்த காதலன்..... வயிற்றெரிச்சலில் 90’ஸ் கிட்ஸ்.....


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சூர்யா தேவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் மீது காதல் மலர்ந்துள்ளது. அதன்படி லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி ஆகிய பெண்களை இவர் காதலித்து வந்தார். அந்த இரு பெண்களும் சூர்யாவை காதலித்த நிலையில் திருமணம் என வந்தால் பிரச்சனை வெடிக்குமோ என்று சூர்யா பயந்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக இரு பெண்களின் பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதனால் ஒரே நேரத்தில் அவர் தன்னுடைய இரண்டு காதலிகளையும் திருமணம் செய்து கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment