முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, March 13, 2025

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

 


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தன்னை விடுவிக்க கோரி விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா தாக்கல் செய்த மனுவும், கவர்னரின் ஒப்புதல் பெறாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தள்ளுபடி செய்யக்கோரி விஜயபாஸ்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இதே கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கோர்ட்டில் வந்தது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். இ்தையடுத்து விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment