அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக மக்கள் புகார் அளித்ததும், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும் கையும் களவுமாக பிடிப்பட்டு வருகின்றனர்.அந்தவகையில், சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு நகராட்சி பில் கலெக்டர் குணசேகரன், நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, ராமசாமி, லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
போலீசாரின் ஆலோசனைப்படி லஞ்சப் பணம் 25 ஆயிரம் ரூபாயை ராமசாமி கொண்டு சென்றார். அதை அவரிடம் இருந்து குணசேகரன் வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

0 Comments