7 நாள் தான் டைம்..... கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்..... சென்னை மேயர் பிரியா எச்சரிக்கை - MAKKAL NERAM

Breaking

Friday, March 14, 2025

7 நாள் தான் டைம்..... கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்..... சென்னை மேயர் பிரியா எச்சரிக்கை

 


தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைப்பதற்கு அரசு பலன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் மஞ்சப்பைத் திட்டத்தின் கீழ் மஞ்சப்பை விற்பனை  இயந்திரத்தை சென்னை மேயர் பிரியாநேற்று  தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மஞ்சப்பைத் திட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக 25 இயந்திரங்களும் அடுத்தது 17 இயந்திரங்களும் சென்னையில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மார்ச் மாதத்தில் மட்டும் 12 நாட்களில் மொத்தம் 108 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு  அழிக்கப்பட்டுள்ளது. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சென்னை மாநகரக் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் இதற்கு ஏழு நாட்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் பெயர் பலகை மாற்றாத கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment