உள்ளாடையோடு ஓட்டம்..? பிக்பாஸ் பிரபலம் விளக்கம் - MAKKAL NERAM

Breaking

Monday, March 10, 2025

உள்ளாடையோடு ஓட்டம்..? பிக்பாஸ் பிரபலம் விளக்கம்

 


பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் விக்ரமன். இவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். அந்த சீசனில் முக்கிய போட்டியாளராகவும் இருந்தார். அவர் அரசியல் கட்சியில் இருந்ததும், அந்த கட்சியினர் அவருக்கு பிக்பாஸ்டைட்டில்  ஜெயிக்க ஆதரவு கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பைனலில் அசிம் தான் டைட்டிலை வென்றார். பிக் பாஸ் முடிந்த பிறகு விக்ரமன் பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கினார். அதாவது தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றுவதற்காக பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்திருந்தார்.

அவர் மீது பதிவு செய்த புகார் தற்போது போலீஸ் விசாரணையில் தான் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விக்ரமன் புது சர்ச்சையில் சிக்கி உள்ளா.ர் அதாவது பெண் வேடமிட்டு அவர் ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.. மேலும் உள்ளாடையோடு அவர் ஓடும் வீடியோவும் வைரலானது. 

இந்த நிலையில் விக்ரமன் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். அதனால் இது சினிமா சூட்டிங் வீடியோ தான் என்பது உறுதியாகி உள்ளது.

No comments:

Post a Comment