இந்திய துணை ஜனாதிபதிக்கு மாரடைப்பு.... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - MAKKAL NERAM

Breaking

Sunday, March 9, 2025

இந்திய துணை ஜனாதிபதிக்கு மாரடைப்பு.... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

 


இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இன்று அதிகாலை மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு  73 வயதாகும் அவர், இரவு 2 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவமனை இதய மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தலைமையிலான மருத்துவ குழு மேற்கொண்டு வருகிறது.

துணை ஜனாதிபதி தன்கர் தற்போது நிலையாக இருக்கிறார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவர்கள் குழுவொன்று அவரின் உடல்நிலை மேம்பாடு குறித்து கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment