காட்டாங்கொளத்தூர்: ஊரட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா..... முன்னாள் ஊராட்சி தலைவர் கல்யாணி ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 18, 2025

காட்டாங்கொளத்தூர்: ஊரட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா..... முன்னாள் ஊராட்சி தலைவர் கல்யாணி ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

 


சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங் கொளத்தூர் ஓன்றியம் வேங்கட்மங்கலம் ஊராட்சி தொடக்கபள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவி  தலைமையில் ஆசிரியர் முன்னிலையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. 

ஆண்டு விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் கல்யாணி ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். இதனை தொடந்து விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பதக்கங்களும் விருதுகளையும் தலைவர் கல்யாணி ரவி வழங்கினார். 

மேலும் பள்ளியின் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆண்டு விழாவை சிறப்பாக அமைத்து கொடுத்த முன்னள் ஊராட்சி தலைவர் கல்யாணி ரவி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் அகிலா இந்நிகழ்ச்சியில் ஆசிரிய  பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment