சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 20 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அறிக்கை வெளியிட்டனர்.
கூடுதலாக மது பாட்டலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, கொள்முதலை குறைத்து கணக்கு காட்டியது, பணியிட மாற்றம் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் சோதனையில் சிக்கியதாக அமலாக்க துறையினர் கூறியிருந்தனர்.
அமலாக்க துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்ட விரோத பரிமாற்ற தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்க துறைக்கு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாஸ்மாக் சோதனை தொடர்பான வழக்கில் வருகிற 25-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
No comments:
Post a Comment