மத்திய அமைச்சரின் மருமகன் சுட்டு கொலை - MAKKAL NERAM

Breaking

Thursday, March 20, 2025

மத்திய அமைச்சரின் மருமகன் சுட்டு கொலை

 


மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த்தின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் ஹாஜிபூரில் உள்ள வீட்டில் மருமகன்கள் ஜெய்ஜித் மற்றும் விஷ்வஜித் ஆகியோருக்கு இடையே தண்ணீர் குழாயை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது துப்பாக்கியால் சுட்டதில் விஸ்வஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஜெய்ஜித் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த ஜெய்ஜித், காயமடைந்த அவரது தாய் ஹினா தேவி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment