முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி - MAKKAL NERAM

Breaking

Thursday, March 27, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

 


தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 3-ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார். தற்போது மீண்டும் உடல் நல குறைவு காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment