உசிலம்பட்டி: டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது தகராறு..... போலீஸ்காரர் அடித்துக் கொலை - MAKKAL NERAM

Breaking

Thursday, March 27, 2025

உசிலம்பட்டி: டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது தகராறு..... போலீஸ்காரர் அடித்துக் கொலை

 


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் 40, உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வருகிறார்.இன்று பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறி வந்த முத்துக்குமார், கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்துள்ளார்.



அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பின்னால் வந்து போலீஸ்காரரை கல்லால் தாக்கி படுகொலை செய்தனர். அவருடன் இருந்த ராஜாராமையும் தாக்கியதால் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment