தமிழக மகளிரை பாதுகாக்க துப்பில்லை..... மதுபானக் கடையை பாதுகாக்க காவல் படை குவிப்பு..... அண்ணாமலை விமர்சனம் - MAKKAL NERAM

Breaking

Friday, March 21, 2025

தமிழக மகளிரை பாதுகாக்க துப்பில்லை..... மதுபானக் கடையை பாதுகாக்க காவல் படை குவிப்பு..... அண்ணாமலை விமர்சனம்

 


தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் பாஜகவினரை கைது செய்த நிலையில் மாலை 6:00 மணி ஆகியும் அவர்களை விடுவிக்காததால் அண்ணாமலை கடும் வாக்குவாதம் செய்தார். 

அப்போது இனி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஆணி அடித்து பிரேம் போட்டு ஒட்டுவோம் என்று கூறினார்.இதேபோன்று தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாஜக மகளிர் அணி மற்றும் பாஜக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஸ்டாலின் அப்பா என்ற வாசகத்துடன் ஒட்டி வருகிறார்கள்.  இது தொடர்பான வீடியோக்களை தமிழக பாஜக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜகவினர் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஒட்டி வரும் நிலையில் தற்போது டாஸ்மாக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக பாஜகவினர் டாஸ்மாக்கில் ஸ்டாலினின் புகைப்படத்தை ஒட்டவரும் போது அவர்களை தடுத்து நிறுத்துவதோடு அதனையும் மீறி போட்டோவை ஒட்டும் நிர்வாகிகளை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் இது தொடர்பான வீடியோக்களை தமிழக பாஜக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு தமிழகத்தில் எத்தனையோ சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறும் நிலையில் அதனை தடுக்காமல் டாஸ்மாக் கடைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளனர்.

No comments:

Post a Comment