மீஞ்சூர்: திமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் - MAKKAL NERAM

Breaking

Thursday, March 27, 2025

மீஞ்சூர்: திமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழக திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளுக்கு நாள் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள திமுக தொண்டர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திமுக நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு உதவுமாறு கட்சித் தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.

 அதன் பேரில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் ஏற்பாட்டில் மீஞ்சூர் பஜார் பகுதியில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின்னர் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் உள்ளிட்ட குளிர்யான  பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

 நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்புவாணன், மாவட்ட நிர்வாகிகள் முகமது அலவி,கோளூர் கதிரவன், சுப்பிரமணி ஜெயசித்ரா சிவராஜ், ஒன்றிய செயலாளர் முரளிதரன், சக்திவேல், ஜெகதீசன், நகர கழக செயலாளர்  ரவிக்குமார், ஆரணி பேரூர் கழக செயலாளர் முத்து, மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணை தலைவர்  அலெக்சாண்டர் முன்னாள் கவுன்சிலர் பா.து.தமிழரசன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment