ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கும் தேதி அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 18, 2025

ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கும் தேதி அறிவிப்பு



 நீலகிரியில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் கூட்டம் நடந்தது. தோட்டக்கலை துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆன்லைன் வழியாக பங்கேற்றார்.அப்போது, ஊட்டி மலர் கண்காட்சி எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி மே மாதம் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது.

கூடலூரில் 12வது வாசனை திரவிய கண்காட்சி மே, 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி மே, 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே 16ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை நடக்கிறது. குன்னூரில் 65வது பழகண்காட்சி மே 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.குன்னுர் காட்டேரி பூங்காவில் முதல் முறையாக மலை பயிர்கள் காட்சி மே 31 மற்றும் ஜுன் 1 ம் தேதி நடக்கிறது.

No comments:

Post a Comment