சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, March 5, 2025

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியில் சென்னை புறநகர் மாவட்டம் அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைக்கிணங்க நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி சென்னை புறநகர் மாவட்டம் அம்மா பேரவை துணை செயலாளர் மீனா கே சேகர் தலைமையில் கழக பொதுக்குழு உறுப்பினர் ராஜாராம் சென்னை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கபாலிஸ்வரன் மற்றும் சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி அம்மா பேரவை செயளாலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அவர்களின் ஆலோசனைப்படி 500கும்  மேற்பட்டவர்களுக்கு வேட்டி புடவை வழங்கி மதியம் 1000கும் மேற்பட்டவர்களுக்கு இனிப்புகளுடன் கூடிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மாநில அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அம்மா பேரவை துணை செயலாளர் மணிமாறன் சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி செயளாலர் ஜானகிராமன் மற்றும் 182வது வார்டு மாமன்ற உறுப்பினர் கேபிகே சதிஷ் குமார் மற்றும் அதிமுக  கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment