பாவூர்சத்திரம் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா - MAKKAL NERAM

Breaking

Sunday, March 30, 2025

பாவூர்சத்திரம் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா


தென்காசி,பாவூர்சத்திரம் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 ம் ஆண்டு மழலை குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தாளாளர் அந்தோணி சேவியர் தலைமை வகித்து, மழலை குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் தேன்கனி, ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments:

Post a Comment