• Breaking News

    சென்னை வந்தது ரஷ்ய போர்க்கப்பல்கள்..... இந்திய கடற்படையுடன் கூட்டுப்பயிற்சி

     


    இரு நாடுகளிடையேயான கூட்டுப்பயிற்சி கடந்த 2003ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் முதன்முதலாக நடைபெற்றது. அதன்பிறகு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, ரஷ்யா கடற்படையினர் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி வரும் சென்னை கடற்கரை பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, ரஷ்ய கடற்படையின் பசுபிக் பெருங்கடல் அணியை சேர்ந்த கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன.

    இந்தக் கூட்டுப் பயிற்சியானது இரு கட்டங்களாக நடக்கின்றன. முதற்கட்டமாக, இருநாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து இந்தியா, ரஷ்யா கப்பற்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். அப்போது, விளையாட்டு, போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன. 2வது கட்டமாக, அடுத்த வாரம் இருநாடுகளின் கப்பல்களும் வங்களா விரிகுடா கடலில் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

    இந்திய கப்பற்படை சார்பில் 1970-80ல் வடிவமைக்கப்பட்ட 61 எம்.இ., கப்பல் இந்த பயிற்சியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments